Sunday, May 16, 2004
எத்தனையோ மாற்றங்கள்!
நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு பரிசலை நதியில் ஏற்றுகிறேன். நண்பர்கள் தொலைதூரம் கடந்து நிற்பது சன்னமாய் இமை குறுக்கி பார்க்கத் தெரிகிறது. துடுப்பை வேகமாய் போடவேண்டியிருக்கும் போல.
மூச்சைத் திணரடிக்கும் பலப்பல மாற்றங்களை காணமுடிகிறது. வலைப்பூவகம் இடம் மாறியிருக்கிறது; மெருகேறியிருக்கிறது. வலைஞர்களின் சஞ்சிகை கூட மாற்றம் கண்டுவிட்டது. சுவையான வலைப்பூக்கள் மொட்டவிழ்ந்துள்ளன. நான் பழகிய வலைப்பூ ஜாம்பவான்கள் (பரி, காசி) மீண்டும் புதுவிடம் போயுள்ளனர். அப்பப்பா! எத்தனை மாற்றங்கள்! இன்னும் நான் காணாதவை எத்தனையோ!
நண்பர்கள் பலரின் கடிதங்களுக்கு பதில் போடவேண்டிய இனிய கடமையும் இருக்கு. மரத்தடி குளிர்காலப் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனதில் வருத்தங்கள் ஆயிரம். வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் கோடி.
விரைவில் விஷயங்களுடன் சந்திக்கிறேன்.
- வினோபா.

Comments:
Post a Comment